Venkatarangan's profileVenkatarangan's SpacesPhotosBlogListsMore Tools Help

Blog


    November 10

    தமிழ் இணையம் - வளர்ச்சியும் வரலாறும்

    “தமிழ்  இணையம் - வளர்ச்சியும் வரலாறும்” என்றத் தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் “தி.ந.ச.வெங்கட ரங்கன்” பேசியது

    இன்று நான் “தமிழ்  இணையம் - வளர்ச்சியும் வரலாறும்” என்ற தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் அமைந்துள்ள தொன்மைச்சிறப்பு வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தில் அதன் எசுபிளனேடு கிளையின் இலக்கியப்பிரிவாகிய ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய இக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள்/புலவர்களையும் தமிழ் தகவல் தொழில்ஙட்ப வல்லுனர்களையும் இணைக்கும் ஒரு முயற்சியாக இதை நான் நினைக்கிறேன்.

    உத்தமம் செயற்குழு உறுப்பினரும் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் துணைத் தலைவருமாகிய மறைமலை இலக்குவனார் வரவேற்புரை வழங்கினார்.அவர் தமது வரவேற்புரையில் உத்தமம் அமைப்பைப் பற்றி ஓர் அறிமுகம் வழங்கியதுடன் கணிப்பொறி வல்லுநர்களுடன் தமிழ் அறிஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் தேவையையும் வந்துள்ள விருந்தினர் பற்றிய் அறிமுகத்தையும் வழங்கினார்.

    தலைமையுரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரம் தமது தலைமையுரையில் தமிழ்க்கணினியுலகம் கண்டுள்ள வளர்ச்சியையும் இன்னும் இங்கே நிறைவேறவேண்டியுள்ள பணிகள் கடல் போல் பரந்துகிடப்பதையும் எடுத்துக் கூறினார்.

    உத்தமத்தின் பொருளாளர் தில்லைக்குமரன் அவர்கள் தமது உரையில் தமிழர்கள் இன உணர்வும் மொழி உணர்வும் கொண்டு ஆற்றவேண்டிய சூழலையும் தமிழ் இணையம் இவ்வகையில் ஆற்றிவரும் பணியையும் தமிழுலகம் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

    அடுத்து  பேசிய நான் (தி.ந.ச.வெங்கடரங்கன்) அச்சுருவின் தோற்றமும் வளர்ச்சியும், ஒருங்குறி என்றால் என்ன, உலகமொழிகள் அதில் பங்கு கொள்வது எவ்வாறு, தமிழ் ஒருங்குறியில் பெற்றுள்ள இடம்/விதம், ஏனைய மொழிகள்-குறிப்பாகச் சீனமும் சப்பானியமும்-ஒருங்குறியில் பெற்றுள்ள இடங்களுக்கும் தமிழ் பெற்றுள்ள இடங்களுக்குமான வேற்றுமை, விசைப் பலகை என்பது யாது, குவெர்ட்டி (QWERTY) என்றழைக்கப்படும் ஆங்கிலமொழிவிசைப்பலகையின் அமைப்புக்கும் தமிழ்மொழி விசைப்பலகைக்கும் வாய்ந்த வேற்றுமைகள் எவை, இன்னும் நாம் அடையவேண்டிய இலக்குகள் யாவை, கணினியை முழுமையும் தமிழ் ஆளும்வகையில் இன்னும் என்னென்ன செய்யவேண்டியுள்ளது, மின் - அரசாங்கம், விளம்பரம், கணினி விளையாட்டு ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நன்மைகள், மொழிபெயர்ப்பில் கணினியைப் பயன்படுத்தும் வகையில் செய்யவேண்டிய முயற்சிகள், பேச்சு-எழுத்து, எழுத்து-பேச்சு மடைமாற்றம் செய்யப்பயன்படும் மென்பொருளின் தேவை மற்றும் வருடி OCR), பிழைதிருத்தும் மென்பொருள் ஆகியவற்றில் நாம் அடையவேண்டிய இலக்கு ஆகியவை குறித்து எளிமையாக (என்று எண்ணுகிறேன்) பேசினேன். இதன் ஒளிப் பதிவைக் கீழே பார்க்கலாம் (விரைவில்)

    உத்தமம் அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, இதுவரை நடத்தியுள்ள மாநாடுகள், உறுப்பினராகச் சேர விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஆகியவற்றை உத்தமத்தின் செயலர்-இயக்குனர் கவியரசன் பேசினார்.

    November 03

    Padma Shri recipient Prof. M. Anandakrishnan

    Photo with Padma Shri recipient Prof. M. Anandakrishnan

    The other day I was visiting the residence of Prof.M.Anandakrishnan (Former VC of Anna University, Chairman IIT Kanpur, Advisor INFITT). I noticed the display in his living room of his “Padma Shri” award (2002) from President of India. Immediately I requested “Prof” (as many call him) for a quick photograph next to it, he readily obliged.

    October 25

    தமிழ் இணைய மாநாடு 2009 நிறைவு விழா

    தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு கடந்த மூன்று நாட்களாக (அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை) ஜெர்மனியில் நடைபெற்றது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.

    இந்த ஆண்டு முதல் முறையாக ஐரோப்பாவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. "கணி வழி காண்போம் தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருந்தது. உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பலர் பங்கேற்றார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டது.

    சில மணி நேரம் முன்பாக நடந்த முடிவுரையில் உத்தமம் சார்பாக வெளியிடப்பட்ட மாநாட்டின் அறிவிப்பை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது (முழுமையான பிரதியை இங்கே பெறலாம்).  இதில் மிக முக்கியமான அறிவிப்பாக நான் கருதுவது ஒருங்குறி (Unicode) முறையைப் பற்றியது.

    “ஒருங்குறி (Unicode) முறை தற்பொழுது பெரும்பாலான வணிக நிரலிகள், செல்பேசி நிரலிகள், மின்னியல் ஊடகங்களில் பயன் படுத்தப் படுவதனால், உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது”

    சுமார் பத்தாண்டுகளாக தமிழக அரசில் நிலுவையில்  இருக்கும் இந்த பரிந்துரை இத்தோடு அரசாலும் (பயனாளர்களால் ஏற்கனவே பயனில் உள்ளது) எற்றுக் கொள்ளப்படும் என நம்புவோம். சில வாரங்களுக்கு முன் தமிழ் இணைய பல்கலைக்கழகம்  ஒருங்குறி முறைக்கு மாறியது மற்றும் அரசின் பல்வேறு இணையவழி சேவைகள் ஒருங்குறி முறையில் செய்யபடுவது முன்னோட்டம் என கருதுவோம். 

    TIC2009 Closing Ceremony -Venkatarangan presenting the communique

    October 23

    Tamil Internet Conference 2009 begins

    After working hard for last few months along with other organizers including INFITT Chair Dr.Kalyanasundaram, Prof.Ulrike Niklas, Mr.Kavi Arasan, Dr.Vasu Rengathan & others, I am happy to participate today in the inauguration of TIC 2009 in the campus of University of Cologne, Germany.  The Eighth Tamil Internet Conference TIC 2009 and the first in Europe was inaugurated few hours back with the august presence of Prof.Dr.Bongartz (Dean of Philosophical Faculty of Univ. of COLOGNE) & Prof.M.Anandakrishnan (Chair, Tamilnadu Govt. Delegation & Former VC, Anna University). The 3 day conference is being hosted by the Institute of Indology and Tamil Studies of the University of Cologne in Germany is being held from October 23-25, 2009.

    The conference got underway with the address of the co-chairs of the event Dr.Kalyanasundram (INFITT) and Prof.Ulrike Niklas (Institute of Indology and Tamil Studies-IITS). Prof.Urlike highlighted that IITS hosts the largest Tamil books collection of over 60,000 which is the largest outside Tamilnadu. Dr.Kalyanasundram recalled the founding of INFITT in 2000, the objectives and the past 7 conferences held around the world (Singapore, Chennai, Malaysia, USA) and the outcomes.

     

    In the plenary session talks, Mr.Muthu Nedumaran (Malaysia, Former Chair INFITT) to the excitement of the audience demonstrated Tamil enabling 3G Mobile devices such as iPhone, Android, Nokia for News applications. Prof. A.G.Ramakrishnan (Indian Institute of Science, Benguluru) demonstrated a major technical breakthrough of live changing implications for the blind and illiterate through IT. The audience were spell bound when Prof.Ramakrihnan’s computer read out a text from a Tamil book (Text to Speech) and then recognized his handwriting on the screen. Prof.Thomas Malten (IITS) showed the various online Sanskrit, Tamil Dictionaries made available by IITS, the University of Cologne has made available the tools used to prepare these texts.

    INFITT TIC2009 plenary session (Bottom Left is Venkatarangan)

    About INFITT

    INFITT (International Forum for Information Technology in Tamil) is a global, non-governmental, non-profit organization registered in California, USA. In Tamil known as "உத்தமம்" (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம்). Its main objective is to promote Tamil computing worldwide by bringing together professionals working in the area of Tamil IT, Tamil IT enthusiasts, Tamil Research Scholars and ordinary Tamils so that Tamils can enjoy the benefits of all IT developments natively in the Tamil environment. To meet this objective, INFITT maintains several working groups on key technical areas of Tamil IT and organizes annually Tamil Internet Conferences in different parts of the world. More details at www.infitt.org